-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி ( வயது 59) என்பவர் இன்று மேல திருக்கழிப்பாலை கிராமத்தில்வயலில் வேலை செய்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தார்
-
உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
நேற்று பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பிராந்தியஇராணுவ வீரரான ஹிலால் அகமது பட் அவர்களின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
-
3வது ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க முடிவு
ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் இஸ்ரோஜி.எஸ்.எல்.வி., மட்டுமின்றி, என்.ஜி.எல்.வி.,[புதிய தலைமுறை ராக்கெட்) ராக்கெட்டுகளையும் ஏவும் வசதி கொண்ட 3வது ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க முடிவு; இந்த ஏவுதளத்தில் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் போன்ற சோதனை மையமும் அமைக்கப்படும்‘இஸ்ரோ’ தலைவர் சோம்நாத்
-
தக்காளியின் விலை
சென்னையில் தக்காளியின் விலை வெளிச்சந்தையில் கிலோ ₹80 வரை விற்கப்படும் நிலையில், கூட்டுறவு பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கிலோ ₹49க்கு விற்பனைஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 கிலோ வழங்கப்படுகிறது
-
ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்
கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 2ம் தேதி ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட விவகாரத்தில், தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர் மதுபோதையில் பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்
-
பிரதமர் நெதன்யாகு அழைப்பு
ஹிஸ்புல்லாவை அகற்றி போரை முடிவுக்கு கொண்டுவர லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு ஹிஸ்புல்லாவிடம் இருந்து விடுவிப்பதன் மூலம் போர் முடிவுக்கு வரும்; அவ்வாறு செய்யாதபட்சத்தில் காசாவில் நாம் பார்ப்பது போல் லெபனானில் அழிவுக்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கும் – நெதன்யாகு
-
தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம்
தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு; அதிமுகவினர், பிற அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
-
கொலை வழக்குப்பதிவு
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர், சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழப்பு கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஈஸ்வர், யுவராஜ், பிரதீப், சந்துரு உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
-
கலாச்சார மையம்
தைவான் மும்பையில் புதிய இந்திய அலுவலகத்தை (தைபே பொருளாதார கலாச்சார மையம்) திறக்க உள்ளது.
-
ஆன்லைன் விளையாட்டில் சுமார் ₹5 லட்சம் பணத்தை இழப்பு
உத்தரப்பிரதேசம் ஆன்லைன் விளையாட்டில் சுமார் ₹5 லட்சம் பணத்தை இழந்துவிட்டு, ஹேக் செய்து பணம் திருடப்பட்டதாக பெற்றோரிடம் நாடகமாடிய சிறுவர்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக தந்தை சென்றபோது போதிய பணம் இல்லாதது தெரியவரவே, வங்கி கணக்கை ஆராய்ந்தபோது உண்மை தெரியவந்துள்ளது
Join 900+ subscribers
Stay in the loop with everything you need to know.