Category: District
-
ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்
கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 2ம் தேதி ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட விவகாரத்தில், தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர் மதுபோதையில் பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்
-
20 ஆண்டுகள் சிறை தண்டனை
சென்னை சோழிங்கநல்லூரில் கடந்த 2019ம் ஆண்டு தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உமாபதி என்ற முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2000 அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
-
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கம் –
கன்னியாகுமரியில் 6ஆம் தேதி நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தது விமர்சனமான நிலையில் நடவடிக்கை அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கம் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிகன்னியாகுமரியில் 6ஆம் தேதி நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தது விமர்சனமான நிலையில் நடவடிக்கை
-
1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்
அபுதாபியில் இருந்து இன்று (அக்.7) காலை கோவை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ 1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்களை விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கோவை- அபுதாபி இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில் அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பயணி ஒருவரின் உடமையை ஆய்வு…
-
பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணி
பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப்கார் சேவை இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு
-
பவர் டூல்ஸ் சாதனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை
ஆளுநர் ரவி அவர்கள், தென்காசி மாவட்டத்தில் உள்ளூரில் பயிற்சி பெற்ற திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களால் மேக்இன்இந்தியா, சுயசார்புபாரதம் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுக்கும் பவர் டூல்ஸ் சாதனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டார்.
-
விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
** நாகை அருகே விபத்தில் சிக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்; கோயில் மதில் சுவரில் கார் மோதிய நிலையில், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திருப்பிய போது விபத்து
-
விபத்தில் சிக்கி போலீசில் மாட்டிக்கொண்ட கொள்ளையர்
கோவையில் காரை திருடிக்கொண்டு வால்பாறை நோக்கிச் செல்லும்போது விபத்துக்குள்ளான சாலமன் கைதுகையில் காயங்களுடன் பிடிபட்ட அவரிடமிருந்து, ₹1.20 லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை.
-
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.
கிருஷ்ணகிரி ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் இயங்கிவரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து – அதிக அளவில் கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.ஆலையிலிருந்த பணியாளர்கள் வெளியேற்றம்.தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.