-
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் அக்.24 வரை நடைபெற உள்ளன
-
முதல்முறையாக $700 பில்லியனை கடந்து புதிய உச்சம்
முதல்முறையாக $700 பில்லியனை கடந்து புதிய உச்சம்ஒரே வாரத்தி அந்நியச் செலாவணி கையிருப்பு முதல்முறையாக $700 பில்லியனை கடந்து புதிய உச்சம்ஒரே வாரத்தில் $12.58 பில்லியன் அதிகரித்து செப்டம்பர் 27-ம் தேதி நிலவரப்படி $704.885 பில்லியன் (~59 லட்சம் கோடி ரூபாய்) என்ற புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
-
₹315 கோடியில் புதிய டைடல் பூங்கா
திருச்சியில் 5.58 லட்சம் சதுர அடியில் ₹315 கோடியில் புதிய டைடல் பூங்கா இபயர் 6 தளங்களுடன் அமையும் டைடல் பார்க் பணிகளை 18 மாதங்களில் முடிக்க இலக்குகட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு டைடல் பார்க் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
-
அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
புதிதாக பொறுப்பேற்ற இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
-
பாஜக vs என் ஆர் காங்கிரஸ்
புதுச்சேரியில் பாஜகவுக்கு போட்டியாக கட்சியை பலப்படுத்த என்.ஆர் காங்கிரஸும் களம் இறங்கியுள்ளது.புதிய உறுப்பினர்களை சேர்க்க மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இன்று ஆலோசித்தனர்.கட்சித் தொடங்கியதில் இருந்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமிக்காத நிலையில் கட்சிகளில் பொறுப்புத் தரவும் முடிவு எடுத்துள்ளனர்.
-
100 நாள் திட்ட முறைகேடு
100 நாள் வேலைத் திட்டத்தை பல ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்துகிறார்கள்; ஊராட்சி மன்ற தலைவர்கள் கொள்ளை அடிப்பதையும், ஊழல் செய்வதையுமே நோக்கமாக வைத்துள்ளனர் அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து பணிகளை செய்வதில்லை; கண்காணிப்பதும் இல்லை – 100 நாள் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
-
அரசியல் சாசன அமர்வு நிராகரித்தது.
பட்டியலிடப்பட்ட சாதியினரை துணை வகைப்படுத்த அனுமதித்த அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்களை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நிராகரித்தது.
-
23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
“தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மாலை 5.30 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, ஈரோடு, கோவை, தேனி,திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
-
அர்ச்சகர் குடும்பத்திற்கு கல்வி உதவி
இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு மொத்தம் ரூ. 50 இலட்சம் வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ. 10,000/-க்கான வங்கி வரைவோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
Join 900+ subscribers
Stay in the loop with everything you need to know.