Category: international
-
பிரதமர் மோடி என்னிடம் கேட்டார்
6 ஆண்டுகளுக்கு முன்பு AI பற்றி யாரும் பேசாத நிலையில், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது அமைச்சரவைக்கு அதை பற்றி விளக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டார்.
-
ரெட் அலர்ட்
வங்கக்கடலில் உருவானது டாணா (DANA) புயல். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதுஅக். 25ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும். இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்!
-
பிரதமர் அறிக்கை
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குப் பிரதமர் ரஷ்யாவுக்குப் புறப்படுவதற்கான அறிக்கை – “16வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் நான் இரண்டு நாள் பயணமாக கசானுக்கு இன்று புறப்படுகிறேன். நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. BRICS க்குள் இது உலகளாவிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரல், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, மீள்திறன் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், கலாச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்றவற்றின் முக்கியத்…
-
ஜெர்மனி திட்டம்
இந்தியர்களுக்கான திறமையான தொழிலாளர் விசாக்களை தற்போது 20,000 ஆக இருந்து ஒவ்வொரு ஆண்டும் 90,000 ஆக அதிகரிக்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.
-
பிரதமர் மோடி உரை
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு அதிகரித்து, ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுஇந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் நாடுகளின் ஒற்றுமை மற்றும் நடுநிலைத்துவத்திற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் – லாவோஸில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
-
பிரதமர் நெதன்யாகு அழைப்பு
ஹிஸ்புல்லாவை அகற்றி போரை முடிவுக்கு கொண்டுவர லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு ஹிஸ்புல்லாவிடம் இருந்து விடுவிப்பதன் மூலம் போர் முடிவுக்கு வரும்; அவ்வாறு செய்யாதபட்சத்தில் காசாவில் நாம் பார்ப்பது போல் லெபனானில் அழிவுக்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கும் – நெதன்யாகு
-
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகோருக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறதுசெயற்கை நரம்பியல் நெட்வர்க்குகள் மூலம் இயந்தர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது
-
வேற்றுக்கிரகவாசிகள்
👽🛸 வேற்றுக்கிரகவாசிகள் அணுசக்தி தளங்களை தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
-
பயணிகள் அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற QF59 விமானத்தின் இருக்கைகளில் உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி17 வயதுக்கு மேற்பட்டோருக்கான படம் ஒளிபரப்பப்பட்ட நிலையில், அதை Off செய்யவோ, Pause செய்யவோ முடியவில்லை என பயணிகள் முகம் சுளித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நிகழ்ந்ததாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
இஸ்ரேலிய கடற்படை தாக்குதல்
லெபனான் சிடோன் பகுதி பொதுமக்கள் கடற்கரைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என இஸ்ரேல் எச்சரிக்கை இஸ்ரேலிய கடற்படை தாக்குதல் நடத்தலாம்