Category: District
-
கொடைக்கானலில் கவர்னரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வந்த கவர்னர் R.N.ரவியின் கவனத்தை ஈர்க்கும் வகையில்**அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்புறம் மற்றும் அவர் பங்கேற்க சென்ற வழிகளில் திராவிடர் தமிழர் மன்றம் சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில்**தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வாசகங்கள் இடம் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டன.**நேற்று இரவு வரை இந்த போஸ்டர்கள் தெரியாத நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டதால் அதனை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர்*
-
அமலாக்கத்துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனைதஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீடு மற்றும் சென்னையில் MLA-க்கள் விடுதியில் உள்ள வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை எனத் தகவல்
-
வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் மற்றும் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பயனர்களின் கனக்கு விபரங்களை தர மறுத்த X நிறுவனத்திற்கு எதிராக வழக்கு”போலி கணக்குகளை உருவாக்கி மிரட்டல் விடுபவர்களின் தகவல்களை அந்நிறுவனம் தர மறுக்கி்றது என்றால், அதற்கு அந்நிறுவனமும் துணை போகிறதே என்று பொருள்” என மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வாதம்அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு தில்லை நகர் காவல் நிலையத்தில் இருந்து திருச்சி…
-
தெரியா…தா?**அல்லது* *தெரிஞ்சே…வா ?
கன்னியாகுமரி அதிமுக எம்.எல் ஏ தளவாய் சுந்தரம் ஆர்எஸ்எஸ் பேரணியை துவக்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இப்படி இருக்கிறச்சே இன்னிக்கு கொட்டாரம் என்ற ஊரில் நடக்க ஆயுத பூஜை விழாவில் தளவாய் சுந்தரம் பெயரை பதவியுடன் போட்டு பங்கேற்பதாக நோட்டீஸ் அடித்து விநியோகித்திருக்கிறார்கள். இது குமரி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு. அண்ணனை நீக்குனது தெரியாதா? அல்லது வேணும்னே இப்படி செய்கிறார்களா? என்று புலம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.…
-
இன்று கன மழைக்கு வாய்ப்பு
15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புதிண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு
-
கோரிக்கை மனு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி, முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு பல்கலை. சார்பில் 4 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளனர்; 4 பேரும் பதவி உயர்வில் சென்றுவிட்டனர்
-
தொழிலாளி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி ( வயது 59) என்பவர் இன்று மேல திருக்கழிப்பாலை கிராமத்தில்வயலில் வேலை செய்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தார்
-
ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்
கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 2ம் தேதி ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட விவகாரத்தில், தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர் மதுபோதையில் பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்
-
20 ஆண்டுகள் சிறை தண்டனை
சென்னை சோழிங்கநல்லூரில் கடந்த 2019ம் ஆண்டு தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உமாபதி என்ற முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2000 அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
-
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கம் –
கன்னியாகுமரியில் 6ஆம் தேதி நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தது விமர்சனமான நிலையில் நடவடிக்கை அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கம் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிகன்னியாகுமரியில் 6ஆம் தேதி நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தது விமர்சனமான நிலையில் நடவடிக்கை