எள்ளோதரை செய்வது எப்படி….தேவையான பொருட்கள்:வடித்த சாதம் – கப்கறுப்பு எள் (அ) வெள்ளை எள் – 4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 4பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைகறிவேப்பிலை – சிறிதளவுஎண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுகடுகு – ஒரு ஸ்பூன்செய்முறை:அடுப்பில் ஒரு வெறும் வாணலியை வைத்து அவற்றில் எள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.ஆறிய பின் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தப்பருப்பு சேர்த்து பொரித்து கொள்ளவும்.பின்பு ஒரு கப் வடித்த சாதம் மற்றும் அரைத்த பொடி ஆகியவற்றை சேர்த்துக் கிளறி இறக்கவும். அவ்வளவு தான் எள்ளோதரை தயார்…
Leave a Reply